இணைய தளங்களுக்கு செல்லாமல் மென்பொருட்களை தரவிறக்கம் செய்வது எப்படி???

நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் பதிவிட தொடங்கியுள்ளோம். இதுநாள் வரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்.... இன்று உங்களுக்கு தேவையான அதிகம் பயன்படுத்தப்படுகிற இலவச பிரயோக மென்பொருட்களை (Free Application Softwares) அந்த மென்பொருட்களின் உத்தியோகபூர்வ தளங்களுக்கு தனித்தனியாக சென்று தரவிறக்கம் செய்யாமல் தேவையான அனைத்து மென்பொருட்களையும் ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதை பற்றி கூறுகின்றேன்...

   நீங்கள் புதிய கணினி கொள்வனவு செய்திருந்தாலோ அல்லது பழைய கணினியின் இயக்க முறைமை (Operating System- OS) மென்பொருளை மாற்றியிருந்தாலோ திரும்பவும் உங்கள் கணினிக்கு பிரயோக மென்பொருட்களை(Application Softwares) நிறுவ வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் உங்களுக்கு தேவையான [ Skype, Open Office, Antiviruses, Browsers] மற்றும் நீங்கள் அறிந்திராத இலவச பிரயோக மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கு நீங்கள் ஒவ்வொரு தளமாக சென்று தரவிறக்கம் செய்ய வேண்டியிருக்கும்... அதற்கு பதிலாக ஒரே நேரத்தில் தேவையான அனைத்து இலவச பிரயோக மென்பொருட்களையும் (Free application Softwares) தரவிறக்கம் செய்ய கூடியதாக இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி தானே... நமது நேரமும் சேமிக்கப்படும்...ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு நீங்கள் அதற்குரிய மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும் அல்லது அதற்குரிய இணையத்தளத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும்... அதற்காக இலகுவான பயனர் இடைமுகத்துடன் (User Interface) கூடிய ஒரு மென்பொருளையும் ஒரு தளத்தையும் உங்களுக்கு பரிந்துரைக்கின்றேன்... அவற்றினை ஒவ்வொன்றாக கீழே நோக்குவோம்...

முதலாவதாக DDdownloads மென்பொருளை பற்றி பார்ப்போம்... 

      DDdownloads மென்பொருள் மூலம் உங்கள் கணினிக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற நச்சு நிரல் தடுப்பி(Antivirus) முதல் இணைய உலாவி(Browser) வரையான அனைத்து மென்பொருட்களையும் தரவிறக்க முடியும்... இலகுவான பயனர் இடைமுகத்துடன்(User Interface) கூடிய இந்த மென்பொருள் உங்களுக்கு இலகுவாகவும் இருக்கும்.... இதில் நீங்கள் உங்கள் தேவையை பொறுத்து உங்கள் மென்பொருள் தேடலையும் மேற்கொள்ள முடியும்.. (Category wise) 


அடுத்ததாக Ninite தளம் பற்றி பார்ப்போம்... 

Ninite தளமானது DDownload மென்பொருளை விட வித்தியாசமாக இருந்தாலும் DDownload மென்பொருளுக்கு சமமாக உதவக்கூடியது... இத்தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான மென்பொருட்களை தெரிவு செய்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்...


குறிப்பு:-
இணையத்தில் எழுதும் ஒவ்வொரு தமிழருக்கும் தமிழை இணையத்தில் வாழ வைக்க வேண்டிய கடமை உள்ளது. ஆகவே என்னால் முடிந்த அளவுக்கு சொற்களை தமிழில் தந்துள்ளேன். அதனை புரிந்துகொள்ள முடியாதவர்களுக்காக பக்கத்தில் ஆங்கிலத்திலும் தந்துள்ளேன். எனது மொழிநடை கடினமாக இருப்பின் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்... அடுத்து வரும் பதிவுகளில் திருத்திக்கொள்கிறேன்... நன்றி....

Comments

Post a Comment